டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,61,470 ஆக உயர்ந்து 1,57,966 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,846 பேர் அதிகரித்து மொத்தம் 1,12,61,470 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 113 அதிகரித்து மொத்தம் 1,58,079 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 20,138 பேர் குணமாகி  இதுவரை 1,09,17,624 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,81,143 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 9,927 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,38,398 ஆகி உள்ளது  நேற்று 56 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,556 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,182 பேர் குணமடைந்து மொத்தம் 20,89,294 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 95,322 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,316 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,81,056 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,329 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,386 பேர் குணமடைந்து மொத்தம் 10,39,281 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 37,146 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 590 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,56,041 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,373 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 366 பேர் குணமடைந்து மொத்தம் 9,36,616 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,033 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 118 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,90,884 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,176 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 89 பேர் குணமடைந்து மொத்தம் 8,82,670 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,038 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,56,246 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,525 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 510 பேர் குணமடைந்து மொத்தம் 8,39,648 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.