டில்லி
இந்தியாவில் நேற்று 1,65,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,144 பேர் அதிகரித்து மொத்தம் 2,78,93,472 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,463 அதிகரித்து மொத்தம் 3,25,998 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 2,64,348 பேர் குணமாகி இதுவரை 2,54,46,820 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 21,09,497 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 20,295 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 57,13,215 ஆகி உள்ளது நேற்று 832 பேர் உயிர் இழந்து மொத்தம் 94,040 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 31,963 பேர் குணமடைந்து மொத்தம் 53,39,838 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,76,573 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 20,628 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,67,449 ஆகி உள்ளது இதில் நேற்று 492 பேர் உயிர் இழந்து மொத்தம் 28,298 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 42,443 பேர் குணமடைந்து மொத்தம் 21,89,064 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,50,066 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 23,513 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,94,386 ஆகி உள்ளது. இதில் நேற்று 198 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 28,100 பேர் குணமடைந்து மொத்தம் 22,52,505 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,33,031 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 30,018 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,39,716 ஆகி உள்ளது இதில் நேற்று 486 பேர் உயிர் இழந்து மொத்தம் 23,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 31,759 பேர் குணமடைந்து மொத்தம் 17,06,298 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,10,157 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,014 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,88,152 ஆகி உள்ளது. நேற்று 155 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 20,208 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,902 பேர் குணமடைந்து மொத்தம் 16,21,743 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 46,201 பேர் சிகிச்சையில் உள்ளனர்.