டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,67,431 ஆக உயர்ந்து 1,51,198 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 16,085 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,04,67,431 ஆகி உள்ளது.  நேற்று 150 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,51,198 ஆகி உள்ளது.  நேற்று 16,735 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,92,130 ஆகி உள்ளது.  தற்போது 2,19,788 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,558 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,69,114 ஆகி உள்ளது  நேற்று 34 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,061 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,302 பேர் குணமடைந்து மொத்தம் 18,63,702 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 54,179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 792 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,27,559 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,140 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 593 பேர் குணமடைந்து மொத்தம் 9,05,751 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,649 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 277 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,84,916 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,129 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 289 பேர் குணமடைந்து மொத்தம் 8,75,243 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,544 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 724 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,26,261 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,222 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 857 பேர் குணமடைந்து மொத்தம் 8,06,875 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 7,164  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,546 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,11,149 ஆகி உள்ளது.  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,303 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,659 பேர் குணமடைந்து மொத்தம் 7,43,467 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,186 பேர் சிகிச்சையில் உள்ளனர்.