டெல்லி: இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 33,000 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், அதிபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,587 டன் மருத்துவக் கழிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தொடங்கிய காலங்களில் இருந்து, நாடு முழுவதும் மருத்துவ கழிவுகளின் பங்கும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையிலான மாஸ்க், காலணிஉறைகள், , ஊசிகள், சிரிஞ்சுகள், பிளாஸ்திரிகள், பாதுகாப்பு உடைகள்உடைகள் போன்றவை மட்டுமின்றி, தொற்று சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மனித திசுக்கள், ரத்தம் மற்றும் உடல் திரவத்தால் மாசுபட்ட பொருட்கள், படுக்கை விரிப்புகள் போன்றவைகளும்  தொற்று கழிவுகளாகி விடுகின்றன.  இதனால் நாடு முழுவதும் பயோ வேஸ்ட் அதிகரித்து வருகிறது.  இவைகள் அனைத்தும் பத்திரமாக பாதுகாப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டு,  அழிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் டிசமபர் வரையிலான 7 மாதங்களில் இந்தியா முழுவதும் 32,994 டன்  தொற்று மருத்துவக் கழிவுகள் உருவாகி உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB Central Pollution Control Board (CPCB) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ( 2020) அக்டோபர் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் அதிகபட்சமாக மொத்தம் 5,500 டன் கழிவுகள் உருவாகி உள்ளன.  நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமாக 5,367 டன்னும், அடுததபடியாக கேரளாவில் 3,300 டன், குஜராத்தில் 3,086 டன், தமிழகத்தில் 2,806 டன், உ.பி.யில் 2,502 டன், டெல்லியில் 2,471 டன், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகாவில் முறையே 2,095 மற்றும் 2,026 டன் கொரோனா கழிவுகள் உருவாகி இருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மருத்துவக் கழிவுகள் 198 பொது உயிரியல் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.