டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,36,86,073 ஆக உயர்ந்து 1,71,089 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,694 பேர் அதிகரித்து மொத்தம் 1,36,86,073 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 880 அதிகரித்து மொத்தம் 1,71,089 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 96,727 பேர் குணமாகி  இதுவரை 1,22,50,440 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 12,58,906 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 51,751 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 34,58,996 ஆகி உள்ளது  நேற்று 258 பேர் உயிர் இழந்து மொத்தம் 58,245 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 52,312 பேர் குணமடைந்து மொத்தம் 28,34,473 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,64,746 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,692 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,72,883 ஆகி உள்ளது.  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,796 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,474 பேர் குணமடைந்து மொத்தம் 11,20,174 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 47,593 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 9,579 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,74,869 ஆகி உள்ளது  இதில் நேற்று 52 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,941 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,767 பேர் குணமடைந்து மொத்தம் 9,85,924 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 75,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 6,711 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,40,145 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,927 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,339 பேர் குணமடைந்து மொத்தம் 8,80,910 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 46,308 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 3,263 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,28,664 ஆகி உள்ளது.  நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,311 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,091 பேர் குணமடைந்து மொத்தம் 8,98,238 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,115 பேர் சிகிச்சையில் உள்ளனர்.