டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,26,200 ஆக உயர்ந்து 1,53,067 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 14,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,06,26,200 ஆகி உள்ளது. நேற்று 161 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,53,067 ஆகி உள்ளது. நேற்று 17,726 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,82,889 ஆகி உள்ளது. தற்போது 1,85,826 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 2,886 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,00,878 ஆகி உள்ளது நேற்று 52 பேர் உயிர் இழந்து மொத்தம் 60,523 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,980 பேர் குணமடைந்து மொத்தம் 19,03,408 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 45,622 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 624 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,34,252 ஆகி உள்ளது இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,187 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 815 பேர் குணமடைந்து மொத்தம் 9,14,492 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 139 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,86,557 ஆகி உள்ளது இதுவரை மொத்தம் 7,142 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 254 பேர் குணமடைந்து மொத்தம் 8,77,893 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,522 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 6,334 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,70,530 ஆகி உள்ளது. இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,546 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,229 பேர் குணமடைந்து மொத்தம் 7,96,986 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 69,771 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 596 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,33,011 ஆகி உள்ளது இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,299 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 705 பேர் குணமடைந்து மொத்தம் 8,15,516 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.