புனே: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும்., பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவனத்தில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாக சீரம் நிறுவனம் தலைவர் பூன வல்லா தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டின் அஸ்ராஜெனெகா கொரோனா தடுப்பு மருந்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம்,  கோவிஷீல்டு  என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் டெர்மினல் 1 நுழைவு வாயில் பகுதியில் உள்ள கட்டிடங்களில் நேற்று பயங்கர  தீ விபத்து ஏற்பட்டது.  விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.  இந்த  தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.  அங்கு கட்டுமான பணிகள் நடந்து வந்ததும், 5-வது மாடியில் 5 பேர் தீயில் சிக்கி பலியாகினர். பலியான 5 பேரும் கட்டுமான தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது.

Poo

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் வெல்டிங் செய்யும்போது ஏற்பட்ட தீப்பொறியால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலையில்,  உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ய சீரம் நிறுவன தலைவரான ஆதர் பூனவாலா,தெரிவித்து உள்ளார்.

எங்கள் சீரம் நிறுவன வளாகத்தில் நடந்த இந்த துயர சம்பவம் வேதனை அளிப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.