டில்லி

நேற்று இந்தியாவில் 13,84,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.   நேற்றைய தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி உள்ளது.   இதுவரை இந்தியாவில் சுமார் 1.41 லட்சம் பேர்  பாதிக்கப்பட்டு அதில் 1.75 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  மேலும் 1.24 கோடி பேர் குணம் அடைந்து 14.66 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து உடனடியாக தனிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.  அவ்வகையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 13,84,549 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 26,20,03,415 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.  இந்த தகவலை இந்திய அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.