டில்லி
இந்தியாவில் நேற்று 1,33,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,33,953 பேர் அதிகரித்து மொத்தம் 2,84,40,988 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,897 அதிகரித்து மொத்தம் 2,11,750 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 2,31,879 பேர் குணமாகி இதுவரை 2,63,82,897 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 17,08,716 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 15,169 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 57,76,184 ஆகி உள்ளது நேற்று 553 பேர் உயிர் இழந்து மொத்தம் 96,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 29,270 பேர் குணமடைந்து மொத்தம் 54,60,589 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,16,016 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 16,387 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,35,122 ஆகி உள்ளது இதில் நேற்று 463 பேர் உயிர் இழந்து மொத்தம் 30,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 21,199 பேர் குணமடைந்து மொத்தம் 23,12,060 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,93,024 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 19,661 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,66,001 ஆகி உள்ளது. இதில் நேற்று 213 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,223 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 29,708 பேர் குணமடைந்து மொத்தம் 23,63,868 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,92,513 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 25,317 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,48,346 ஆகி உள்ளது இதில் நேற்று 483 பேர் உயிர் இழந்து மொத்தம் 25,205 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 32,263 பேர் குணமடைந்து மொத்தம் 18,34,439 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,88,702 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 12,768 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,17,156 ஆகி உள்ளது. நேற்று 98 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,132 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 15,612 பேர் குணமடைந்து மொத்தம் 15,62,229 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,43,795 பேர் சிகிச்சையில் உள்ளனர்.