டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,15,222 ஆக உயர்ந்து 1,54,956 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 11,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,08,27,170 ஆகி உள்ளது.  நேற்று 72 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,55,028 ஆகி உள்ளது.  நேற்று 11,599 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,05,21,409 ஆகி உள்ளது.  தற்போது 1,46,198 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,768 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,41,398 ஆகி உள்ளது  நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,280 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,739 பேர் குணமடைந்து மொத்தம் 19,53,926 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 34,934 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,942 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,62,364 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,849 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,178 பேர் குணமடைந்து மொத்தம் 8,90,720 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 67,555 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 531 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,42,031 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,233 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 434 பேர் குணமடைந்து மொத்தம் 9,23,811 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 75 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,350 ஆகி உள்ளது  நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,159 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 153 பேர் குணமடைந்து மொத்தம் 8,80,179 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,012 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 477 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,41,326 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,382 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 503 பேர் குணமடைந்து மொத்தம் 8,24,527 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,417 பேர் சிகிச்சையில் உள்ளனர்.