டில்லி
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 7,15,776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கான சிகிச்சை இன்னும் கண்டறியப்படாமல் உள்ளது. தற்போது கண்டறிதல், சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவை முக்கிய சிகிச்சை முறைகளாக உள்ளன.
அகில உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 1,08,03,533 பேர் பாதிக்கப்பட்டு 1,54,862 பேர் மரணம் அடைந்துள்ளனர். எனவே இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிக அளவில் நடக்கின்றன.
அவ்வகையில் நேற்று ஒரே நாளில் 7,15,776 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாட்டில் இதுவரை 19,99,31,795 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் நேற்று வரை 1,62,28,801 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.