ஸ்ரீதேவிக்குப் பதிலாக ரம்யாகிருஷ்ணனை நடிக்க வைத்த ராஜமவுலி!

Must read

Yes, Ramya wasn’t SS Rajamouli’s first choice…

 

பாகுபலி 2ன் பிரம்மாண்ட வெற்றியால், அந்தப் படம் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமான கதைகளைப் போல் பேசப்பட்டு வருகின்றன.

 

குறிப்பாக, பாகுபலி-2ல், ஆண் கதாபாத்திரங்களை விட, பெண் கதாபாத்திரங்களே பெரிதும் பேசப்படும் அளவிற்கு படத்தின் காட்சிகளும், கதைகளும் அமைந்துவிட்டன. வீறு கொண்ட வேகத்துடன் தேவசேனா பாத்திரத்தில் வரும் அனுஷ்காவாகட்டும், நெருப்பு போன்ற கனல் கக்கும் சிவகாமி பாத்திரத்தில் வரும் ரம்யாகிருஷ்ணனாகட்டும், அனைத்துமே ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

 

இதில் தற்போது வெளிவந்திருக்கும் மற்றொரு தகவல் நம்மை  மேலும் வியப்புக்குள்ளாக்குகிறது.

 

விறுவிறுப்பும், வீராப்பும் மிக்க சிவகாமி பாத்திரத்தில், முதலில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கத்தான் இயக்குநர் ராஜமவுலி திட்டமிட்டிருந்தாராம். படக்குழுவினர் ஆலோசனைப் படி பின்னர் அந்தப் பாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணனை நடிக்க வைத்துள்ளனர். அவரும் எதிர்பார்த்ததற்கு பஞ்சமில்லாமல் தனது நடிப்பைக் கொட்டித் தீர்த்து ஆர்ப்பரித்து விட்டார்.

 

ஆக, முன்னாள் இந்தியக் கனவுக்கன்னியில் இடத்தை ரம்யாகிருஷ்ணன் இட்டு நிரப்பியது மட்டுமல்ல, அதை சிறப்பாகவும் செய்துள்ளார் என்கின்றனர் கோலிவுட், பாலிவுட் வட்டாரத்தினர்.

More articles

Latest article