டில்லி:

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில்,  இந்தியாவின் மதிப்பு வாய்ந்த வங்கிகள் பட்டியலில் உள்ள யெஸ் வங்கியும் கடுமையான சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில், தற்போது 1.2 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக யெஸ் வங்கி மீண்டும் உயிர்த்தெழும் என நம்பப்படு கிறது.

இந்தியாவில் செயற்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கிகளின் யெஸ் வங்கியும் ஒன்று.  இந்தியா வின் ஐந்தாவது பெரிய தனியார்த் துறை வங்கியாகவும், இந்தியாவின் மூன்றாவது நம்பிக்கைக்குரிய வங்கியாகவும் பெயர் பெற்றது.

இந்திய வங்கிகள் ஏற்கனவே கடுமையான வர்த்தகம் மற்றும் வராக்கடன் பிரச்சனையில் சிக்கித்தவித்துக் கொண்டு இருக்கிறது. இதில் யெஸ் வங்கி பல தரப்பட்ட பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு கடந்த 2 வருடமாகத் தவித்து வருகிறது.  கடந்த 2 வருட காலத்தில் யெஸ் வங்கியின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் மீதான மதிப்பை இழந்து பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் யெஸ் வங்கி QIP திட்டத்தின் மூலம் சுமார் 1930 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்து தனது மூலதனத்தை அதிகரித்தது. அதைத்தொடர்ந்து, யெஸ் வங்கி பங்குகளைப் பேடிஎம் நிறுவன தலைவர் விஜய் சேகர் சர்மா வாங்க உள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்ட எஸ்பிஜிபி ஹோல்டிங்ஸ் யெஸ் வங்கியில் சுமார் 1.2 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராணா கபூர் -யெஸ் வங்கி

இதுகுறித்து யெஸ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிதி சேகரிப்பிற்காக  உலகளாவிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் தொடர்ந்து மேம்பட்ட விவாதங்களில் ஈடுபட்டுள்ளது என்றும்,   இது ஒழுங்கு முறை ஒப்புதல்கள் / நிபந்தனைகள் மற்றும் வங்கியின் வாரியம் மற்றும் பங்குதாரர்களின் ஒப்புதல்களுக்கு உட்பட்டு நடைபெற்று வருவதாகவும், கூடுதல் மூலதனத்தை திரட்டுவதற்காக வங்கி தனியார் பங்கு நிறுவனங்கள், மூலோபாய முதலீட்டாளர்கள் மற்றும் குடும்ப அலுவலகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக யெஸ் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி ரவ்னீத் கில் ஏற்கனவே  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வங்கியின் வாரியம் வெளியிட்டுள்ளஅறிவிப்பில், எஸ்.பி.ஜி.பி ஹோல்டிங்ஸ் மற்றும் பிற திட்டங்களின் முதலீட்டு திட்டத்தையும் பரிசீலிக்கும் என்று  தெரிவித்து உள்ளது.

மேலும்,  கடன் வழங்குநர் நிதி திரட்ட முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மைக்ரோ சாப்ட் கார்ப்பரேசன்  உள்ளிட்ட உயர்மட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாகவும்,  அவர்களில் ஒருவரை ஒரு மூலோபாய பங்குதாரராக சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்ட எஸ்பிஜிபி ஹோல்டிங்ஸ் யெஸ் வங்கியில் சுமார் 1.2 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து,  வங்கியின் பங்குகள்  35% ல் இருந்து . 76.65 ஆக உயர்ந்துள்ளன.

விஜய் சேகர் சர்மா – பே டிஎம்

ஆனால் யெஸ் வங்கி தற்போது இருக்கும் நிலையில் இந்த 2000 கோடி ரூபாய் முதலீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதனால் இந்த டீல் நிச்சயம் ஒப்புதல் பெறும் என அனைத்து தரப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி ஒரு நிறுவன முதலீட்டாளர்கள் வங்கியில் 5 சதவீத பங்குகள் வரையில் அனுமதி பெறாமல் முதலீடு செய்யலாம். அதற்கு மேற்பட்ட அளவுகளில் பங்கு முதலீடு செய்ய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.