சேலம்:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு கோடை விழா 12ந்தேதி தொடங்குகிறது. ஆனால், தற்போது மாநிலம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் தொடர்வதால், ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
பொதுவாக ஏற்காட்டில், சுற்றுலா வரும் பயணிகளை கவரும் வகையில், மே மாதம் இறுதியில் 3 நாட்கள் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வரும் 12ந்தேதியே கோடை விழா தொடங்குவதாகவும், இந்த ஆண்டு 5 நாட்கள் கோடை விழாவை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இந்த தொடங்க உள்ள மலர் காண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தொடங்கி வைக்க இருப்பதாகவும், கோடை விழாவையொட்டி, கோலப்போட்டி, சமையல் போட்டி, நாய் கண்காட்சி, கலை நிகழ்ச்சி கள் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மலர் கண்காட்சி நடைபெற உள் அண்ணா பூங்காவில் ஏற்கனவே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளை ஊழியர்கள் தயார் செய்து பராமரித்து வருவதமாகவும், தற்போதே அங்கு வண்ண, வண்ண அழகிய மலர்கள் பூந்து குலுங்குவதராகவும், . சுற்றுலா பயணிகள் ஏரிகளில் படகு சவாரி செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது
கோடை விழா ஏற்பாடுகளில் மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.