டில்லி:

ர்நாடக மாநிலத்தில் பாஜவை பதவி ஏற்க அழைத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நேற்று இரவு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற விவகாரத்தில், தன்னுடைய வாதத்தை கேட்க வேண்டும் என்றும் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி மனு தாக்கல் செய்துள்ளார்.

தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நேற்று காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘

இந்த மனுவை எடுத்துக் கொண்டு சென்று உச்சநீதிமன்ற பதிவாளர் – தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, பாப்டே மற்றும் அசோக் பூசன் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நேற்று இரவில் காரசாரமான விவாத்துடன் விசாரணை நடைபெற்றது. இறுதியில் கவர்னரின் முடிவில் தலையிட மறுத்த உச்சநீதி மன்றம், முதல்வராக பொறுப்பேற்க தடை விதிக்க முடியாது என்று  கூறியது.

மேலும், பதவி ஏற்பது, இநத  வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும்,  மே 15-ம் தேதி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டும்  வழக்கின் விசாரணையை நாளை (இன்று)  காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தனா்.

இந்நிலையில், கர்நாடக அரசு விவகாரத்தில், ஆளுநரின் முடிவை எதிர்த்து விவாதிக்க தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும்  என்றும், இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக ஏற்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி  மனு தாக்கல் செய்துள்ளார்.. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரதியஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி தாக்கல் செய்துள்ள மனுவின் காரணமாக எடியூரப்பா விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.