மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர்கள் ஜெய், மனோஜ், நடிகை காயத்ரியை தொடர்ந்து தற்போது நடிகை யாஷிகா ஆனந்தும் இணைந்திருக்கிறார்.

சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் நேற்று நள்ளிரவு வேகமாக வந்த கார் சாலையோரம் உள்ள கடை ஒன்றின் மீது மோதி அருகில் நின்றுக் கொண்டிருந்த, உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர் மீதும் மோதியதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் இருந்ததாகவும், விபத்து ஏற்பட்டதும் அவர் காரில் இருந்து இறங்கி, வெளியேறியதாகவும் அங்கிருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

இந்த நிலையில் யாஷிகா ‘நான் உண்மையில் விபத்து நடந்த காரில் செல்லவே இல்லை. நான் காரில் இருந்ததாக வெளி வந்திருக்கும் செய்திகள் பொய்யாக பரப்ப படுகின்றன. என்னுடைய நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக கேள்விப்பட்டதும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தேன .

இது போன்று போலி செய்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப் போகிறேன்’ என்று கூறியுள்ளார்.