சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார்? என்ற பாலியல் வழக்கில், திமுக அனுதாபியான ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி என மகளி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பின் விவரம் ஜுன் 2ந்தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2024ம் ஆ ண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஞானசேகரன் என்ற பிரியாணி கடை வியாபாரியான திமுக அனுதாபி, இருவரையும் மிரட்டி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, தன்னை ஞானசேகரன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், யாருடனோ போன் மூலம் சார் சார் என பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து எதிர்க்கட்சியான அதிமுக சார்பில், யார் அந்த சார் என கேள்வி எழுப்பி போராட்டம் நடைபெற்றது. மேலும் மாநிலம் முழுவதும் யார் அந்த சார் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், மாணவியின் புகாரின் அடிப்படையில், பல்கலை வளாகத்திலேயே நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவரை கைது செய்தனர்.

தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம்பெற்ற சிறப்பு குழு அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஞானசேகரன் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், விசாரணை ஆவணம் வெளியானது தொடர்பாக செய்தியளார்களிடன் போனை வாங்கி சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தியது பேசும்பொருளாக மாறியது. இதனால் அவர்களின் விசாரணை குறித்தும் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்ற வந்தது. இறுதி வாதங்கள் கடந்தவாரம் நடைபெற்ற இறுதி விசாரணையின்போது, குற்றவாளி ஞானசேகரனுக்கு இரக்கம் காட்டக் கூடாது என்றும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற வாதத்தை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறை முன்வைத்துள்ளது. விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் நீதிபதி ராஜலெட்சுமி தீர்ப்பளித்துள்ளார்.
. ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதுபோன்ற தீர்ப்பை சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதியும் வழங்குவார் என எதிர்பார்பபு நிலவுகிறது.
No ‘யார் அந்த சார்’: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
‘யார் அந்த சார்?’ எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் நடைபெற்ற அதிமுக போராட்டம்.. வைரல்… வீடியோ