கொழும்பு:
மிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
ranil
இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக் கொறடா அனுரா குமார திசநாயகே கேள்வி எழுப்பினார்.
இதற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே: இலங்கை கடல் பகுதியில் சுமார் 1,000 தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். சுருக்குமடி வலைக்குத் தடை விதிப்பதுதான் நமது நோக்கம். நமது மீன்வளம் மற்ற நாட்டவர்களால் கொள்ளையடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 140 படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது என்று கூறினார்.
மீனவர் பிரச்னை தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவது என்று இந்திய, இலங்கை அரசுகள் முடிவு செய்துள்ளன. இருநாட்டு மீன்வளத் துறை அமைச்சர்களின் முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.