சாட்னா:
டமாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.  மழை தொடர்ந்து பெய்வதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
madhyapradeshheavyrainscauseflooding08072016-big
ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், பொதுமக்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.   அசாம், உத்தரகண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து மத்தியபிரதேசத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.
தற்போது மழையின் தீவிரம் மேலும் அதிகரித்துள்ளது.  இந்த கன மழையால்  சாட்னா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  அங்குள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியதால், பொதுமக்கள் ஆங்காங்கே சிக்கிக்கொண்டு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக மத்தியபிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை  முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில் அசாமிலுள்ள திக்கம்கார்,  கவுஹாத்தியில் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.  பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.  இதனால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.