வுகான்
கொரோனாவின் ஊற்றுக் கண் எனக் கூறப்பட்ட சீனாவின் வுகான் நகர் தற்போது கொரோனா பாதிப்பற்ற நகர் ஆகி உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் உலகின் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். அதன பிறகு சீனா முழுவதும் பரவிய கொரோனா தற்போது உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது சீனாவில் பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது.
கொரோனாவின் ஊற்றுக் கண் எனக் கூறப்பட்ட வுகான் நகரில் 3 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுக்கு அடுத்தடுத்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி ஆனது. அறிகுறிகளும் மறைந்ததால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையொட்டி வுகான் நகரம் கொரோனா பாதிப்பற்ற நகரம் ஆகி உள்ளது. இந்நகரில் சுமார் 1 கோடி பேர் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹுபெய் மாகாணம் முழுவதுமே தற்போது பாதிக்கப்பட்டோர் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.