தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா?

மும்பையை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த பிரபல ’தாதா’ தாவூத் இப்ராகிம், மும்பையில் 1993 ஆம் ஆண்டு பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தி விட்டுத் தலைமறைவானார்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அந்த நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில், தாவூத் , தனது குடும்பத்தோடு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதனைப் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் தாவூத்தும், அவர் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கராச்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தாவூத்தின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தகவல்கள்.

ஆனால் தாவூத்தின் சகோதரர் அனீஸ், இதனை மறுத்துள்ளார்.

ஒரு ஆங்கில நாளிதழ்  அலுவலகத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அனீஸ், தாவூத்தும், அவரது குடும்பத்தினரும் நலமாக உள்ளதாகவும், அவர்களுக்கு கொரோனா இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

’’ இப்போது தாவூத் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டபோது மவுனம் சாதித்த அனீஸ்,, ‘’ தங்கள் ‘டி’ கம்பெனி பாகிஸ்தான் மற்றும் அமீரக நாடுகளில் வியாபாரம் செய்து வருகிறது’’ என்று ஒப்புக்கொண்டுள்ளார்.