அதிபர் இறந்துவிடுவார் என தவறாக கணித்த ஜோதிடர் கைது!

Must read

கொழும்பு,

லங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன விரைவில் இறந்துவிடுவார் என தவறாக கணித்த ஜோதிடரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேன பதவி வகித்து வருகிறார்.

இவர் கடந்த ஜனவரி 27-ஆம் தேதிக்குள் உயிரிழந்துவிடுவார் என ஜோதிடத்தில் ஆர்வம் கொண்ட , இலங்கை கடற்படை வீரரான விஜித ரொஹானா விஜெமுனி என்பவர் கணித்திருந்தார்.

சிறிசேனவின் மரணமானது விபத்து அல்லது உடல்நலக்குறைவு ஆகிய காரணங்களினால் ஏற்படும் எனவும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கையின் பிரபல ஜோதிடர் என்று வலம் வருபவர், முன்னாள் குற்றவாளியான  விஜித் ரோஹன விஜயமுனி. இவர் ஜோதிடம், ஆருடம் பார்ப்பதில் வல்லவராம். இவர் ஒரு சிங்கள வெறியன் என்பது அனைவருக்கும் தெரியும்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனா இன்னும் 6 மாதத்திற்குள் மரணத்தை தழுவுவார் என்றும், மீண்டும் இலங்கையின் ஜனாதிபதி ஆக கோத்தபய ராஜபக்சேவே வருவார் என்று பரபரபப்பு ஆருடம் என்று  6 மாதத்திற்கு முன்பே கொளுத்தி போட்டிருந்தார்.

இந்த பரபரப்பு ஜோதிடர்… பரம்பரை ஜோதிடர் அல்ல. ஏற்கனவே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர் என்பதும், இலங்கை சென்றபோது தமிழக அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியை அணிவகுப்பின்போது துப்பாக்கி கட்டையால் தாக்கி அதன் காரணமாக பல வருடம் சிறை தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஜனவரி 27-ஆம் தேதிக்கு பிறகு சிறிசேனா ஆரோக்கியமாக இருந்ததால்,உடனடியாக தான் கணித்த நாளை வரும் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைத்தார்.

ஆனால் சமூக வலைத்தளம் மூலமாக இவரது இந்த சர்ச்சைக்குரிய கணிப்பு,இலங்கை காவல்துறையின் கவனத்திற்கு சென்றது.

இதனைத் தொடர்ந்து அதிபர் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த காரணத்திற்காக விஜத ரொஹானா கைது செய்யப்பட்டுள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article