புனே

மாணவர் சேர்க்கைக் கடிதத்தில் மாநிலத்தின் பெயர் சரியாக குறிப்பிடப்படாததால் தவறான மாநிலத்துக்கு வந்த மாணவர் சேர்க்கையை இழந்தார்.

புனேவை சேர்ந்த 17 வயது மாணவர் தனியால் கான்.   இவர் என் ஐ டி க்கு இடம் கேட்டு விண்ணப்பிருந்தார்.   இவருக்கு சேர்க்கை கடிதம் வந்துள்ளது.  அதில்  என் ஐ டி – ஏ பிரதேசம் என ஆங்கிலத்தில் இருந்தது.   சாதாரணமாக ஏ பி என்பது ஆந்திரப் பிரதேசத்தை குறிக்கும் என்பதால் அவரும் அங்கு சேர தனது பெற்றோரிடம் சம்மதம் தெரிவித்தார்.

என் ஐ டி என்பதின் விரிவாக்கம் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆகும்.   பொறியியல் துறையில் பல படிப்புகளை கொண்டுள்ள இந்த இன்ஸ்டிட்யூட்டில் இணைவது பல மாணவர்களின் விருப்பமாகும்.

மாணவரின் தந்தை தனது நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு தனது காரில் மகனுடன் மகாராஷ்டிராவில் இருந்து ஆந்திரப் பிரதேசம் சென்றுள்ளார்.   சுமார் 16 மணி நேர பயணத்துக்குப் பின் ஆந்திரப் பிரதேசம் அடைந்தனர்.   அங்கு சென்றதும் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  தனியால் கானுக்கு ஆந்திரப் பிரதேச என் ஐ டி யில் இருந்து சேர்க்கை கடிதம் வரவில்லை என்பதே அது.  அதிர்ந்து போன மாணவர் விசாரித்த போது அது அருணாச்சல பிரதேசம் என சொல்லப்பட்டது.

அதன் பிறகு அவர்கள் உடனடியாக அருணாசல பிரதேசம் செல்ல முடியாது என்பதால் அவரால் என் ஐ டியில் சேரமுடியவில்லை.  இது குறித்து மாணவர் கூறுகையில், “இதில் எங்கள் தவறு ஏதுமில்லை.   ஏ. பி. என ஆங்கிலத்தில் இரு மாநிலங்களையும் குறிப்பதினால் வந்த குழப்பமே இது.  தவறுதலாக 16 மணி நேரமும், 930 கிமீ பயணம் செய்தும் என்னால் சேர முடியவில்லை.   என் தந்தை இதை ஒரு உல்லாசப் பயணமாக நினைத்துக் கொள் என தேறுதல் சொன்னாலும் எனக்கு துயரமாக உள்ளது” என்றார்.  இந்த தகவலை அவர் இணையத்திலும் வெளியிட்டுள்ளார்.

அதை படித்த பலரும் அவருக்கு ஆறுதல் சொன்னதுடன்,  அரசின் இது போன்ற போக்கை வன்மையாக கண்டித்துள்ளார்.  ஒருவர் புனேவிலிருந்து அருணாசல பிரதேசம் செல்லும் வழியையும் குறிப்பிட்டு, இவ்வளவு தூரத்தில் உள்ள இடத்தில் சேர்க்கை உத்தரவு அந்த மாணவருக்கு அளித்தமைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]