மதுரை:
சொத்த்தகராறில் மகனை கொலை செய்து தோட்டத்தில் புதைத்ததாக பிரபல எழுத்தாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை கோச்சடை எஸ்.பி.ஓ.ஏ. காலனியைச் சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் (வயது 55). சீவலப்பேரி பாண்டியின் வாழ்க்கைக்கதையை தொடராக எழுதியதன் மூலம் பிரபலமானவர். இவரது மனைவி லதா பூரணம் (வயது 55). தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் விபின்(வயது 27).
எழுத்தாளர் சௌபாவுக்கும் அவரது மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 14 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சௌபா இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் விபினின் தந்தையான எழுத்தாளர் சௌபா மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரது நடவடிக்கையை காவல்துறையினர் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் விபின் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்து எழுத்தாளர் சௌபாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடைபெற்ற சொத்து தகராறில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களை வைத்து, விபினை சௌபா கொலை செய்ததாகவும் ததும், திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே சௌபாவுக்கு சொந்தமான தோட்டத்தில் சடலத்தை எரித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன், அவரது தோட்டத்தில் பணிபுரியும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டி மூப்பர் தெருவைச் சேர்ந்த பூமி (வயது 40), நிலக்கோட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த கனிக்குமார் (எ) கணேசன் (வயது 42) ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.