2020ம் ஆண்டு ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

Must read

டில்லி:

2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில்  விளையாட தகுதி பெற்றுள்ளார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

‘உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் கடந்த 14ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர்காள பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது,  மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற  முதல் சுற்று போட்டியின் 53 கிலோ எடை பிரிவில் உக்ரைன் நாட்டின் யூலியா கால்வாட்ஜை என்பவரை எதிர்கொண்டார்.  அவரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். அதையடுத்து, மற்றொரு போட்டியில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரான அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்ட் என்பவரை 8-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில்  கிரீஸ் நாட்டு வீராங்கனை மரியா பிரிவோலாரக்கி என்பவரை அவர் எதிர்கொள்ள உள்ளார். 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன் காரணமாக  வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

More articles

Latest article