ஜெனிவா:

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகில் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பேயாட்டம் ஆடி வருகிறது.  இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 30லட்சத்து 65ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2லட்சத்து 11 ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் குணமானோர் எண்ணிக்கை 9லட்சத்து 22 ஆயிரத்து 862 ஆகவும் அதிகரித்து உள்ளது.

உலக வல்லரசான அமெரிக்கா கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கிறது. அங்கு இதுவரை 10லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆனால், பலி எண்ணிக்கையோ கடுமையாக உயர்ந்து உள்ளது. அங்கு இதுவரை 56ஆயிரத்து 803 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை குணமானோர் எண்ணிக்கை 1லட்சத்து 39ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது.

2வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்துக்கு 29ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23ஆயிரத்து 521 பேர் பலியாகி உள்ளனர்.

3வது இடத்தில் இத்தாலி உள்ளது. அங்கு இதுவரை 1லட்சத்து 99ஆயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26ஆயிரத்து 977 பேர் குணமடைந்து உள்ளனர்.

4வது இடத்தில்  பிரான்ஸ் உள்ளது. அங்கு இதுவரை 1லட்சத்து 65ஆயிரத்து 842 பேர் பபாதிக்கப்பட்ட நிலையில், 23,293 பேர் பலியாகி உள்ளனர்.

5வது இடத்தில் ஜெர்மனி உள்ளது.

இந்தியாவில் 29 ஆயிரத்து 451 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 939 பேர் பலியாகியுள்ளனர்.

Highlighted in green
= all cases have recovered from the infection