டில்லி

பூமிக்கு அருகில் உள்ள கோள அடுக்கில் உலகிலேயே மிகவும் சிறியதான (3.5 செ.மீ x 3.5 செ.மீ அளவு கொண்ட), வெறும் 4 கிராம் எடையுள்ள செயற்கைகோள் ஒன்று  நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் முன்மாதிரியான (prototype versions) இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

சூரிய ஒளியைப் பயன்படுத்தி, தனக்கு தேவையான ஆற்றலை தானே தயாரித்துக்கொள்ளும் வகையில் ஒரு சிறிய சோலார் பேனலும் இதோடு இணைக்கப்பட்டுள்ளது.  இந்த விண்கலமாக இருந்த போதிலும் ஒரு கிராமுக்கு 100 மில்லியம் கட்டளைகளை செயற்கைகோளுக்கு அனுப்பும் திறன் கொண்டது.   இந்த செயற்கைகோள் வேற்று கிரகம் குறித்து அறிவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.