டெல்லி: மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய  மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மருந்தை மத்தியஅரசு நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்துள்ளது. உலகிலேயே முதன்முதலாக மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்து கண்டுபிடித்து பாரத் பயோடெக் சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துள்ளது. தொற்று பரவலை முடிவுக்கு கொண்டுவருவதில் தடுப்பூசிகள் பெரும் பங்காற்றின.   ஆனால், கொரோனாவை உலக நாடு களுக்கு அறிமுகப்படுத்திய சீனாவில் இன்றும் கொரோனா பரவல் தொடர்கிறது. அங்கு தினசரி பாதிப்பு 35ஆயிரமாக உள்ளது. இதனால் சில மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.  இந்தியாவில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு  ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. அதுபோல கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொடர்கிறது. இதுவரை 2,19,90,71,394 (73.7%) பேருக்கு சிங்கிள் டோசும், 95,07,28,529 (68.2%) பேருக்கு இரண்டு டோசும் போடப்பட்டு உள்ளது.

தொற்று பரவலை தடுப்பதில் இந்தியஅரசின் பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பெரும்பங்காற்றின. மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில வேக்சின்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை  தடுக்கும் வகையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள இன்கோவாக் (INCOVACC) எனப்படும் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

iNCOVACC® சமீபத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான அவசரகால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டின் கீழ் பன்முகத்தன்மை கொண்ட பூஸ்டர் டோஸ்களுக்கு ஒப்புதல் பெற்றது.

iNCOVACC® என்பது முதன்மையான 2-டோஸ் அட்டவணை மற்றும் ஹீட்டோரோலஜஸ் பூஸ்டர் டோஸ் ஆகியவற்றிற்கான ஒப்புதலைப் பெறுவதற்கான உலகின் முதல் இன்ட்ராநேசல் தடுப்பூசியாகும்.

மூக்குவழி செலுத்தும் கொரோனா மருந்தை இதுவரை எந்தவொரு நாடும் தயாரிக்காத நிலையில், இந்தியஅரசு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் முதன்முதலாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.