இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு கிலோ சாக்லேட் விலை ரூ.4.3 லட்சம்: கின்னசில் இடம்பிடித்தது எப்படி?

Must read

டெல்லி: உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த சாக்லேட் தயாரிக்கப்பட்டு, அது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

பெபெல் எக்ஸ்க்விசிட் என்ற நிறுவனம் இந்த சாதனையை படைத்திருக்கிறது. அந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள அந்த சாக்லேட்டின் பெயர் Trinity – Truffles Extraordinaire என்பதாகும்.

குறைவான சாக்லெட்களே தயாரித்து வெளியாகி உள்ள நிலையில் இந்தச் சாக்லெட்டின் ஒரு கிலோவின் விலை மயக்கம் வராத குறைதான். அதாவது 4.3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்ந்த சாக்லெட்டை உயர்தர சாக்லெட் ப்ராண்ட் ஆன ITC, சமையல் கலைஞர் பிலிப் கோன்டிசினி இணைந்து உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றனர்.கோகோ உள்ளிட்ட பல அரிய பொருட்களும் இந்த கேக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து அந்த சாக்லேட் நிறுவனம் கூறியிருப்பதாவது: சமையல் கலைஞர்களின் பல மாத உழைப்பில் இந்த சாக்லேட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. உலகின் விலை உயர்ந்த சாக்லேட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. முன்கூட்டியே ஆர்டர் செய்தால் தான் இந்த சாக்லேட் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

More articles

Latest article