டெல்லி: உலகின் 2ஆவது பெரிய ஏற்றுமதியாளர் இந்தியா, பழங்குடிபள்ளிகளில் 38800 ஆசிரியர்கள், 102 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி, 9.6 கோடி சமையல் எரிவாயு வழங்கப்பட்டு உள்ளது, ஒரு லட்சம் சுயஉதவிக்குழுக்களில் பெண்கள்சேர்க்கப்பட்டனர் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா நிதி ஒதுக்கீடு, கூடுதல் விமான நிலையங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியிரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர்.

மத்திய பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை வாசித்த நிதி அமைச்சர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டவர், கர்நாடக பாசனத்துக்கும்,.  வறட்சியை சமாளிக்க கர்நாடகாவிற்கு 5,300 கோடி ரூபாய் ஒதுக்குவதாக நிதியமைச்சர் அறிவிக்கையில், தேர்தல் வருவதால் இந்த அறிவிப்பு என எதிர்க்கட்சிகள் கோஷம் மிட்டனர்.

அதுபோல,  50 கூடுதல் ஏர்போட் மற்றும் ஹெலிகாப்டர் தறையிரங்கும் தளம் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிக்கையில் அதானி…! அதானி…! என எதிர்க்கட்சிகள் கோஷம் போட்டனர். அப்போது பாஜக எம்.பி.க்கள் மோடி மோடி என எதிர்கோஷம் போட்டனர். அதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் பாரத் ஜோடோ…! பாரத் ஜோடோ…!  கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

உலகப் பொருளாதாரத்தில் நமது பங்கை வலுப்படுத்த G20 தலைவர் பதவி நமக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது என்றார்.

, பிரதமரின் காப்பீட்டு திட்டங்களால் 44கோடி பேர் பலன் அடைந்துள்ளனர் என்று கூறியவர்,  சிறுதானியங்களை ஏற்றுமதி செய்வதில் உலகின் 2ஆவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது என்றார்.

நாட்டு மக்களில் உச்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை .6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்

 பெருந்தொற்றான கொரோனா பாதிப்பில் இருந்து தடுக்கும் வகையில், நாட்டில், 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் , 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன

அந்தியோதயா திட்டத்தின் கீழ் மேலும் ஓராண்டுக்கு  உணவு தானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்துக்கு முன்னுரிமை அளித்து, விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்!

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்

அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றவர்,  கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம், 10ல் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது, தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது என்றவர்,

2023-24 பட்ஜெட்டில் உள்ளடக்கிய மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, பசுமை வளர்ச்சி, இளைஞர்கள், நிதித்துறை மேம்பாடு ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்.