#உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

உலகம் முழுவதும் ஜூன் 5ந்தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்தில், ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றர். அதற்காக நகரமயமாக்கம் காரணமாக சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க அதிக அளவில் மரங்கள் நட வேண்டும். மனிதா்களுக்கு மட்டுமின்றி பறவைகளும், விலங்குகளும் பாதுகாப்பாக வாழ்ந்திட மரம் அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நம்மை வாழ வைக்கும் இயற்றைகை, நமது சுயநலத்துக்காக அழிக்காமல், இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடும் வகையில், இன்றைய தினம் சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்!
Say yes to nature. Say no to polluting it for luxury.
என தெரிவித்துள்ளார்.