வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,64,05,138 ஆகி இதுவரை 6,51,674 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,15,935 பேர் அதிகரித்து மொத்தம் 1,64,05,138 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,100 அதிகரித்து மொத்தம் 6,51,674 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,00,37,617 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,244 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55,735 பேர் அதிகரித்து மொத்தம் 43,71,444 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 447 அதிகரித்து மொத்தம் 1,49,845 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 20,90,110 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,467 பேர் அதிகரித்து மொத்தம் 24,19,901 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 556 அதிகரித்து மொத்தம் 87,052 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 16,35,274 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,525 பேர் அதிகரித்து மொத்தம் 14,36,019 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 716 அதிகரித்து மொத்தம் 32,812 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,18,735 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,765  பேர் அதிகரித்து மொத்தம் 8,12,485 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 77 அதிகரித்து மொத்தம் 13,269 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,00,250 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,233  பேர் அதிகரித்து மொத்தம் 4,45,433 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 114 அதிகரித்து மொத்தம் 6,769 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,65,077 பேர் குணம் அடைந்துள்ளனர்.