பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இத்தரவரிசையில் கடந்த ஐந்தாண்டுகளாக கலிஃபோர்னியா தொழில்நுட்ப கல்லூரியே முதலிடத்தில் விளங்கியது. இந்நிலையில், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை பின்தள்ளி ஆக்ஸ்ஃபோர்ட் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் உள்ள “டைம்ஸ் உயர் கல்வி” என்ற பத்திரிகை இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
2015 -2016ம் ஆண்டின் சிறந்த, உலகிம் நம்பர்-1 பல்கலைக்கழகமாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலாவதாக உள்ளது. உலக அளவில் ஆய்வு நடத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 13 ஆண்டு வரலாற்றில் யுகே வை சேர்ந்த யுனிவர்சிட்டி முதலாவதாக வந்துள்ளது இதுவே முதல்முறை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து பேசிய, ஆக்ஸ்போர்டு துணைவேந்தராயிருந்த லூயிஸ் ரிச்சர்ட்சன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலாவதாக வந்துள்ளது தனக்கு “சிலிர்ப்பாக” உள்ளது என்று கூறி உள்ளார்.
அடுத்தடுத்த இடங்களை ஸ்டான்போர்ட், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஹார்வர்ட் மற்றும் பிரின்ஸ்டன் உட்பட அமெரிக்க பல்கலைக்கழகங்கள், ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நான்காவது மற்றும் இம்பீரியல் காலேஜ் லண்டன் எட்டாவது இடத்தை வந்தது.
உலகின் டாப் 10 யுனிவர்சிட்டி
credit: https://www.ft.com/content/ec4cec42-7ff8-11e6-bc52-0c7211ef3198