காஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் நிலைப்பாடு என்ன?

Must read

சீனா ஒருபக்கம் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானை ஆதரிப்பதும் இன்னொருபக்கம் நடுநிலையுடன் இருப்பதாக காட்டிக்கொள்வதுமாக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது.
சீனப் பிரதமர் லீ கெகுயாங் கடந்த 21-ஆம் தேதி நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்தார். இருநாட்டு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்த கருத்து பரிமாற்றம் என்றே இச்சந்திப்பு குறித்து கருத்து சீனாவின் செய்தித் தொடர்பாலர் லூ காங் தெரிவித்தார்.
china
மேலும் காஷ்மீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது “இது பல ஆண்டுகால பிரச்சனை. இப்பிரச்சனையில் எங்கள் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். இரு நாடுகளும் இப்பிரச்சனை குறித்து பேசி தீர்க்க வேண்டும்.” என்று மட்டும் லூ குறிப்பிட்டார்.
ஆனால் பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை பாகிஸ்தான் பிரதமர் லீ கெகுயாங் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானை ஆதரிக்கிறார் என்றும், ஐ.நா சபையில்கூட சீனாவின் குரல் காஷ்மிர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்காக ஓங்கி ஒலித்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
டான் பத்திரிக்கை கூறுவது போல சீனா தனக்கு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் அது காஷ்மீர் பிரச்சனையில் ஆதரித்துதான் பேசி வந்திருக்கிறது, ஆக இப்பிரச்சனையில் சீனாவின் இரட்டை நிலைப்பாடு தெளிவாக தெரிகிறது.

More articles

Latest article