இன்று உலக கழிவறை தினம்!

Must read

இன்று உலக கழிவறை தினம்.
இந்தியாவில் 53 சதவிகித வீடுகளுக்கு கழிப்பிட வசதி இல்லை என்று  உலக வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 53 சதவிகித வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால் சுமார் 60 கோடி பேர் திறந்தவெளியைப் பயன் படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
முதல்முறையாக ஐ.நா.சபை  உலக கழிவறை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்ட செவ்வாய்க்கிழமை, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உலகம் முழுவதும் 250 கோடி பேருக்கு போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. நூறு கோடி பேர், திறந்தவெளியைக் கழிப் பிடமாகப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் இந்தியர்கள் மட்டும் 60 கோடி பேர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
kaivarai
“குழந்தைகளின் மூளைத் திறனில், கழிவறைப் பழக்கத் தின் தாக்கம்’ என்ற கட்டுரை யின் ஆசிரியரான டீன் ஸ்பி யர்ஸ் தெரிவிக்கையில்,
“இந்தியாவில் கழிப்பிட விழிப்புணர்வுத் திட்டம் செயல்படுத்தப் பட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 வயதுக் குழந்தை களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் மற்ற பகுதி குழந்தைகளைவிட எண்களையும், எழுத்துக்களையும் கிரகிக்கும் திறனை கூடுதலாகப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், அரசின் அந்தத் திட்டம், சுகாதாரத்துக்கு மட்டுமின்றி குழந்தைகளின் அறிவுத் திறன் வளர்ச்சிக்கும் பயன்படும் என்பது நிரூபணமாகியுள்ளது.
திறந்தவெளியைக் கழிப்பிட மாகப் பயன்படுத்தும் வழக்கம், வளரும் நாடுகளின் மனித வளத் துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது’ என்று கூறினார்.
உலக வங்கியின் குடிநீர் மற்றும் பொது சுகாதாரத் திட்ட அமைப்பின் மேலாளர் ஜேயாங சோ கூறுகையில்,
கழிப்பிட வசதிகள் இல்லையென்றால், அது பொது சுகாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்’ என்று தெரிவித்தார்.
மனிதக் கழிவுகளில் உள்ள கிருமிகளால் தாக்கப்படும் குழந்தைகள், மற்ற குழந்தைகளை விட உயரம் குறைவாக இருப்ப தாக, இந்த ஆண்டு வெளியான உலக வங்கியின் ஆய்வுக் கட் டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டி ருந்தது நினைவுகூரத்தக்கது.

More articles

Latest article