கிங்ஸ்டன்
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டி யிலும் 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் 120 புள்ளிகளுடன் இந்தியா முன்னிலை வகிக்கிறது
கிங்ஸ்டனில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய அணி 416 ரன்களும், மேற்கிந்திய தீவு அணி 117 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய மேற்கிந்திய தீவு வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர். 2வது டெஸ்ட் போட்டி யிலும் 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது
ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டிலும் வெற்றி பெற்றதால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் கோலியின் தலைமையில் இந்திய அணி 28 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
27 டெஸ்ட்களில் வெற்றிதேடித் தந்த தோனியின் சாதனையை கோலி தலைமையிலான அணி தற்போது முறியடித்து உள்ளது. அதுபோல, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையிலும் 120 புள்ளிக ளுடன் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
புள்ளிகள் முறையின்படி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றி வென்ற அணிக்கு 60 புள்ளிகள் வழங்கப்படும், சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இன்டிஸ் அணிக்கு எதிராக கிங்ஸ்டனில் நடைபெற்ற போட்டியின் வது டெஸ்டில் 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக புள்ளிகள் அட்டணையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
அதைத்தொடர்ந்து 2வது இடத்தில் நியூசிலாந்து 60 புள்ளிகளுடன், 3வது இடத்தில் இலங்கை 60 புள்ளி களுடனும், 4வதுஇடத்தில் ஆஸ்திரேலியா 32 புள்ளிகளுடனும், 5வது இடத்தில் இங்கிலாந்து 32 புள்ளிகளும் பெற்றுள்ளன.