அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் : காயம் காரணமாக ஜோகோவிச் விலகினார்

Must read

நியூயார்க்

டப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார்.

அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டிகள் என்பது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டுக்கான  அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டி தற்போது நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் நான்காம் சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டு வீரர் வாவ்ரிங்கா ஆகியோர் மோதினார்கள்.

வாவ்ரிங்கா

 

இந்த போட்டியில் வாவ்ரிங்கா முன்னிலையில் இருந்தார். அவர் 6-4, 7-5, 2-1 என்னும் கணக்கில் முன்னணியில் இருந்தார். தோள்பட்டையில்  ஏற்பட்டிருந்த காயம் காரணமாக நடப்பு சாம்பியன் ஜோகோவிச் விளையாட மிகவும் கஷ்டப் பட்டார். ஆயினும் சமாளித்து விளையாடிய ஜோகோவிச் ஒரு கட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

அதையொட்டி நோவக் ஜோகோவிச் தாம் போட்டியில்  இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ஜோகோவிச் வெளியேறியதை அடுத்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாதாம வாவ்ரிங்கா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் வாவ்ரிங்கா கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி அடைந்துள்ளார்.

More articles

Latest article