சென்னை:

மிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு அனைத்துக் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அவரது தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரிஅனந்தனும் தனது வாழ்த்துக்களை மகளுக்கு தெரிவித்து உள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு முதன்முதலாக ஆளுநர் பதவி கிடைத்துள்ள தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவருக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழிசையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், துணை முதல்வர் ஓபிஎஸ்,தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசைக்கு வாழ்த்து கூறியிருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி உள்பட பல அரசியல் கட்சித்தலைவர்கள் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால், அவருக்கு, அவரது தந்தை வாழ்த்து தெரிவிக்காதது மன வருத்தத்தை அளித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், அவரது தந்தையுமான குமரி அனந்தன் தமிழிசையின் தலையில் கைவைத்து ஆசிர்வதித்து வாழ்த்து கூறினார்.

இதுகுறித்து கூறிய குமரிஅனந்தன், இது  தமிழிசையின் உழைப்புக்குக் கிடைத்த பரிசு. உழைப்பாலும், ஆற்றலாலும் உயர்வு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் என்ற திருக்குறள் படி பெருமை சேர்த்துள்ளார் என்று மகளை மெச்சியுள்ளார்.

இதை தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில்  தந்தையின் அன்பான ஆசிர்வாதத்தில்…
என்று பதிவிட்டுள்ளார்.