கோவை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் உலக சாதனையை கோவை கவுண்டம்பாளையத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் படைத்துள்ளார்.
9மாவட்டம் உள்பட காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக, திமுக, பாஜக உள்பட சுயேச்சைகளும் களமிறங்கினர். வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது.
இதில், திமுக -387 வாக்குகளும், சுயேட்சை -240 வாக்குகளும், அதிமுக -196 வாக்குகளும், மற்றொரு சுயேட்சை வேட்பாளர் 84 வாக்குகளும் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் 01, அதாவது ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றுள்ள அவலம் அரங்கேறி உள்ளது. அவரது ஓட்டு மட்டுமே அவருக்கு விழுந்துள்ளது.அவரது குடும்பத்தினரோ, சொந்தக்காரர்களோ கூட அவருக்கு வாக்களிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளரின் உலக சாதனை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.