ரோம்:

டந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உலக உணவு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன, தானியங்கள் சர்க்கரை காய்கறி மற்றும் எண்ணெய்களுக்கான விலைகள் தொடர்ந்து 4.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கையில் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உணவின் விலைகள் வரம்பு மீறி அதிகரிக்கப்பட்டுள்ளதாக, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தானியங்களின் விலைகள் அதிகபட்சமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7.1 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், சோளத்தின் விலைகள் முன்பு இருந்ததைவிட அதிகபட்சமாக 11.2% உயர்ந்துள்ளதாகவும், அதேநேரத்தில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் அரிசி விலைகள் வரம்பு மீறி அதிகரித்துள்ளதாகவும், பால் மற்றும் இறைச்சி விலைகளும் உலகில் அதிகரித்துள்ளதாகவும் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.