வாஷிங்டன்

லகப்புகழ் பெற்ற பாப் பாட கி மடோனாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 64 வயதாகும் பிரபல பாப் பாடகி மடோனாவின்  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் செரிஷ் படத்தில் நடித்த போது ஒரு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து மடோனாவின் மேலாளர் கை ஓசிரி தனது சமூக வலைத்தளத்தில்,

”ஜூன் 24, சனிக்கிழமையன்று, மடோனாவுக்கு ஒரு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டது, இதனால் அவர் பல நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டியிருந்தது. அவரது உடல்நிலை மேம்பட்டு வருகிறது, இருப்பினும் அவர் இன்னும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்.

அவரது உடல்நிலை சரியில்லாததால் பாடகரின் சுற்றுப்பயணம் மற்றும் பிற வணிகப் பொறுப்புகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சுற்றுப்பயணத்தின் தேதி மற்றும் மறு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிக்கப்படும்”

எனத் தெரிவித்துள்ளார்.