துரை

ரும் செவ்வாய் அன்று உலக பருவநிலை மாசு தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரி நிறுவனம் புதிய முயற்சி ஒன்றைச் செய்ய உள்ளது.

உலகெங்கும்  சுற்றுச்சூழல் மாசு அடைவது மிகவும் அதிகமாகி வருகிறது.   இவற்றில் தொழிற்சாலைகள் பெரும் பங்கு வகிப்பதாகக் கூறப்பட்டாலும் அதை விட வாகனங்கள் வெளியேற்றும் புகையினால் கடும் மாசு உண்டாகிறது என்பதே உண்மை நிலை ஆகும்.  இதைத் தடுக்க அரசு பல முயற்சிகள் எடுத்து வருகின்றது.    ஆயினும் மாசடைவது குறைவதாக இல்லை.

இந்நிலையில் மதுரை நகரில் இயங்கி வரும் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

அன்புடையீர், நமது கல்லூரியில் 24.09.2019 (செவ்வாய்க்கிழமை) அன்று பருவ நிலை மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,  பருவ நிலை மாற்றத்திற்கு காரணமாக தற்பொழுது நிலவி வரும்  சுற்றுச்சூழல் மாசுபடுவதைத தவிர்க்கும் பொருட்டு, உலக பருவநிலை மாசு தடுப்பு தினம் அனுசரிக்கப்பட இருப்பதால் நமது கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் அன்றைய தினம் தங்களுக்குச் சொந்த எரிபொருள் வாகனங்களில் (கார் மற்றும் மோட்டார் சைக்கிள்) வருவதைத் தவிர்த்து மிதி வண்டி அல்லது பேருந்துகளில் கல்லூரிக்கு வருமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.  இதனை முன்னிட்டு அன்று காலை வகுப்புகள் 8 மணிக்கு பதிலாக 9 மணிக்கு துவங்கும் என அறிவுறுத்தப்படுகிறது

எனத் தெரிவித்துள்ளார்.