சென்னை:

டுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள்கள் திருத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த பொறியியல் மாண வர்களில் 19 சதவீதம் பேருக்கு மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டிருந்ததும், இதில் பல்வேறு பேராசிரி யர்கள் முறைகேடாக ஊழல் செய்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதான மரியாதையையும்  குறைத்தது. அதையடுத்து, முறைகேடு ஈடுபட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா,  அண்ணா பல்கலைக்கழத்தை மத்திய அரசு சீர்மிகு பல்கலைக் கழகமாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், அடுத்த பருவத்தேர்வு முதல் அண்ணா பல்கலைகழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வு தாள்கள் திருத்தப்படும் என்றும், அண்ணா பலைக்கழகத்துக்கு தேவையான நிதியை உரிய நேரத்தில் தமிழக அரசு  வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும்,  தமது அமெரிக்க பயணத்தின் போது அங்கு உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேசி இருப்பதாகவும், விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும்  சூப்பா கூறினார்.