சுவிசர்லாந்தில் உள்ள ஜெனிவாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை-தனியார் ஒத்துழைப்பிற்கான சர்வதேச நிறுவனம் “உலகப் பொருளாதார மன்றம்”. இந்த நிறுவனம் தொடர்ந்து சர்வதேச பிரச்சனைகளைக் கண்காணித்து அதனை ஆராய்ந்து ஆய்வு முடிவுகளை வெளியிடும்.
எடெல்மேன் -தகவல் தொடர்பு குழு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக, வணிக, அரசு, மற்றும் மீடியா போன்ற முக்கிய நிறுவனங்களின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றது.
பொதுவாகவே, மக்களுக்கு அரசு/ நிறுவனத்தின் மீதான அவநம்பிக்கை காணப்படுவது வாடிக்கையான விசயம் தான். அதனைத் தெரிந்துக் கொள்ள 28 நாடுகளில் 33,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தித் தெரிந்துக்கொள்ள வேண்டும் எனும் அவசியமில்லை. ஆனால், தற்போது இந்த அவநம்பிக்கை அளவு பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதே இந்த ஆய்வுமுடிவுகளின் சாரம்சம்.
சுருக்கமாக, நம்பிக்கையில் மாபெரும் உலகளவிலான வெடிப்பு ஏற்பட்டுள்ளது” என எடெல்மேன் கூறுகிறார்.
இந்த ஆண்டு நடத்தப் பட்ட கணக்கெடுப்பு வணிகம், அரசு, பத்திரிக்கைத் துறை, மற்றும் தொண்டு நிறுவனங்கள்மீதான நம்பிக்கை வரலாறு காணாத வகையில் மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இப்போது கணக்கெடுக்கப்பட்ட 28 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இத்தகைய நிறுவனங்கள்மீது அவநம்பிக்கை கொண்டுள்ளது அதிகரித்துள்ளது. பல இடங்கள், மிகவும் குறைவான எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.
எடெல்மேன் குழுவினர் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் ஊடகங்கள் கூடப் பெரும் மக்களின் நம்பிக்கையைப் பெருவதில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
பத்திரிகைகளின் மீது நம்பிக்கை இருப்பதாகச் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 48 சதவீதம் மக்கள் பதிலளித்திரு ந்தனர். ஆனால், இந்த ஆண்டுப் பத்திரிக்கை மீது நம்பிக்கை உள்ளது என 43 சதவீதம் பேர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர். இதில் 28 நாடுகளின் 17 நாடுகளில் முன்னெப்பொழுதும் இல்லாததைவிடக் குறைவாக நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
ரிச்சர்ட் எடெல்மேன், அவருடைய பெயரைச் சுமந்திருக்கும் நிறுவனத்தின் தலைவர், “ மக்கள் இப்போது ஊடகங்கள் சமூக உயர் அந்தஸ்தில் இருப்பர்களில் ஒருவராகவே (அவர்களின் கைக்கூலியாகவே) பார்க்கின்றனர்” . சமூக வலைத்தளங்களில் வைரலாகச் செய்திகள் பரவி வரும் காலத்திலும், ஊடகங்கள், ஒருசார்புத் தன்மையுடம் இருப்பது ஒரு தர்மசங்கடமான விசயமாகும்.
குறிப்பாய், இந்திய ஊடகத்துறை உலகின் “நம்பிக்கையற்ற ஊடக நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.
கன்னையா குமார் உள்ளிட்ட மாணவர்களைப் போலி காணொளிக் காட்சிகள்மூலம் தேசவிரோதியாய் காண்பிப்பதில் துவங்கி, ரோகித் வெமுலாக்களை தற்கொலைக்குத் தள்ளும் ஸ்மிதி இராணியின் பேச்சினை தேசபக்திமிக்கவராய் போற்றுவது, 30 நாட்களாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி நிர்வாணப் போராட்டம் நடத்தியும் விவசாயிகளைக் காணாத பிரதமரைக் கண்டுகொள்ளாதது வரை இந்திய ஊடகங்களின் கையாலாகத்தனமும் பாஜக விசுவாசமும் மக்களை அவநம்பிக்கையடையச் செய்துள்ளது.
நம்பிக்கையற்ற அமைப்புகள் நாடுகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களும் சரிவைச் சந்திந்து வருகின்றன. இதில் குறிப்பிடத் தக்க விசயம் என்னவென்றால், அரசுகளை விடக் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகமாக உள்ளது.
அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகளின் அரசுமீது மக்களுக்கு நம்பிக்கையினமை அதிகமாக உள்ளது.
சீனா மற்றும் இந்தோனேசியாவின் என்.ஜி.ஓ.க்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து காணப்படுகின்றது.
ஹாங்காங்கின் வர்த்தகம் மீது மக்களுக்கு அதிகளவு நம்பிக்கை குறைந்துக் காணப்படுகின்றது.