இனி குழந்தையின் பற்களைப் பாதுகாக்க வேண்டும். ஏன் தெரியுமா ?

எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் பால்பற்கள் எனப்படும்  முதல் பற்களை இழக்க நேரிடும். அது அவர்கள் வளர்கின்றனர் என்பதைக் குறிக்கின்றது. இவ்வாறு பால்பற்கள் கீழே விழும்போது உலகின் பல்வேறுப் பகுதிகளில் பின்பற்றப்படும் சடங்குகள் வெவ்வேறானவை. பல இடங்களில், பல் விழுந்த குழந்தை தூங்கி எழும்போது, தலையணைக்கு கீழ் பரிசுப்பணம்கிடைக்கச் செய்யும் பண்பாடு உள்ளது. அந்தக் குழந்தை மகிழ்ச்சியுடன் தனக்குச் தேவையானப் பொருளை வாங்கிக் கொள்ளும்.


சிலர் குழந்தையின் பால்பற்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர். மற்ற சிலர்,  குழந்தையின் விழுந்தப் பல்லை வைத்துக் கொண்டு என்ன பயன் இருந்துவிடப் போகின்றதெனச் சிலர் அதனைத் தூக்கி எறிந்துவிடுவர்.
2003 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வுக் குழந்தை பால்பற்கள் தண்டு செல்களின் ஆதாரமாக விளங்குவதாகவும், தேவைப்பட்டால் அந்தப் பல்லிலிருந்து பல வகையான செல்கள் பயிரிட முடியும் என்று நிருபித்துக் காட்டியுள்ளது.

அதாவது, துரதிஷ்டவசமாக, வாழ்க்கையின் பிற்பகுதியில், ஏதேனும் விபத்து ஏற்பட்டு, மாற்றுத் திசுக்கள் தேவைப்பட்டால், குழந்தையின் பாற்பற்களிலிருந்து ஸ்டெம் செல்கள்மூலம், தேவையான திசுவினை வளர்த்து, அதனைச் சிகிச்சையளிக்க பயன்படுத்த முடியும் என்றுநிருபித்துள்ளனர்.


அதாவது, சேமித்து வைக்கப்படும் குழந்தையின் பற்கள் நடைமுறையில், உயிர்களைக் காப்பாற்றப் பயன்படும், மற்றும் பல்வேறு நோய்களிலிருந்து சிகிச்சை பெறவும் உதவும்.


ஆக, இதுவரை, குழந்தையின் பற்கள் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்ற மந்திர வகையான நம்பிக்கைகளை மீறி, அறிவியல்பூர்வமாக, அது ஆபத்துக் காலத்தில், குழந்தைக்குத் தேவையான மாற்று உறுப்புகள் (மூளைச் செல் முதல், இதயச் செல்வரை) செய்திட உதவும் எனும் செய்து உண்மையில் ஆச்சரியமளிக்கக் கூடியது. ஏன் என்றால்,
நமது ஊரில், பல் மட்டுமின்றி, தொப்புள்கொடியினை அரைத்துப் பொடியாக்கி தாயத்து செய்து, கழுத்திலோ, அரைநாண் கயிரிலோ கட்டிவிடுவது வழக்கம். சில நாடு மருத்துவர்கள், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாதபோது, தாயத்திலிருந்து பொடியை எடுத்து நீரில் கரைத்து குழந்தைக்குக் கொடுத்துக் குணமாக்கும் வழக்கமும் காணப்படுகின்றது.


சிலர் பால்பல்லைக் கூடத் தாயத்தாகச் செய்து வைத்துக் கொள்வது வழக்கம்.
வெறுமனே பற்களை ஒரு பெட்டியில் வைத்துப் பாதுகாத்தல் முடியாது. எனவே, முறையாகப் பாதுகாக்க சில நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவை, சிறிய தொகையினை பெற்றுக்கொண்டு, தங்கள் குழந்தையின் பற்களைப் ஒரு திரவ நைட்ரஜன் பெட்டகத்தில் (cryopreservation) வைத்துப் பாதுகாக்கும். குழந்தை வளர்ந்துப் பெரியவனானதும் அவரச நேரத்தில் தேவைப்படும்போது, உலகின் எந்த மூலையில் இருந்துக் கொண்டு நீங்கள் தொடர்புக் கொண்டாலும், அதனை, உடனடியாகக் கொரியர் செய்துவிடுவார்கள்.
இனி, பால் பற்கள்/ ஸ்டெம்-செல் பாதுகாப்பகம் எனும் வியாபாரம் தலைதூக்குவதை உதாசீனப்படுத்திவிட முடியாது.

 

நன்றி: லிடில்திங்க்ஸ்.காம்