நியூயார்க்: உலக நாடுகளின் கடன் பெருமளவில் அதிகரித்துள்ளதற்கு, அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு பெருமளவு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் மொத்தக் கடன் 250 டிரில்லியன் டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த 2019ம் ஆண்டு முதல் அரையாண்டில் உலக நாடுகளின் கடன் 7.5 டிரில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இது, கடந்த காலாண்டில் 250.9 டிரில்லியன் டாலராக இருந்ததாகவும், 2019ம் ஆண்டின் இறுதியில் 255 டிரில்லியன் டாலராக அதிகரித்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு மட்டுமே 60% ஆகும். உலகின் ஒவ்வொரு தனிநபர் தலையிலும் ரூ.23 லட்சத்து 40 ஆயிரம் கடன் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில், இந்தியா பெற்ற கடன் 2.7% ஆகும். பணமதிப்பில் இதன் அளவு 1.36 லட்சம் கோடியாகும்.
வட்டி விகிதம் குறைவாக இருப்பதே கடன் அளவு அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், இனி வரும் காலங்களில், கடன்பெற்ற நாடுகள் கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் திண்டாட வேண்டிய நிலை வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.