உலகக்கோப்பை டி 20: இந்தியா அணி அபார வெற்றி 

Must read

துபாய்: 
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து  பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை எடுத்திருந்தது. அதிகப்பட்சமாக மைக்கேல் லீஸ்க் 21 ரன்களை எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, அதிரடியாக தனது ஆட்டத்தை தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஜோடி 80 ரன்களை குவித்தது. இதில் ராகுல் 19 பந்துகளில் 6 பவுண்ட்ரிகள், 3 சிக்ஸர்கள் என 50 ரன்களை குவித்தார்.
இவர்களையடுத்து களமிறங்கிய கோலி, சூர்ய குமார் ஜோடி அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். இதன் காரணமாக இந்திய அணி எளிதாக வெற்றிப் பெற்றது.
இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இது இரண்டாவது வெற்றியாகும். மொத்தமாக இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இந்திய அணி இரண்டு தோல்வி, இரண்டு வெற்றி என சமநிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article