உலகக்கோப்பை தொடரில், ஜுன் 26ம் தேதி வரையிலான நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களில் எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆனால், ஆறாவது இடத்தில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

சில நாட்களாக புள்ளிப் பட்டியலில் 6வது இடத்திலிருந்த இலங்கையைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது. வங்கதேசம் 5வது இடத்தில் தொடர்கிறது. 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் 1 தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா தனது அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதிசெய்துவிட்டது.

தற்போது இங்கிலாந்து வெறும் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. வரும் நாட்களில், அந்த இடத்தைப் பிடிக்க பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் கடும் முயற்சி செய்யலாம். எனவே, அடுத்த 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே இங்கிலாந்து தப்பிக்கும்.

மற்றபடி, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகியவை தங்களுக்கான மீதமிருக்கும் ஆட்டங்களை பெயரளவுக்கே விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.