ண்டன்

லகக் கோப்பை போட்டியில் இந்தியா அணிய உள்ள சீருடை நிறத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தற்போது உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டி அணிகளின் சீருடை குறித்து ஐசிசி விதிமுறைகள் அறிவித்துள்ளது.   அதன்படி ஒரே நிற சீருடை கொண்ட அணிகள் விளையாடும் போது சீருடைகளின் நிறத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.   போட்டியை நடத்தும் நாடுகளுக்கும் தனி நிறத்தை கொண்ட அணிகளும் நிறத்தை மாற்றுக் கொள்ள வேண்டாம்.

வரும் 30 ஆம் தேதி அன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் போது ஆரஞ்சு நிற சீருடை அணிந்து விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.   இதற்கு இந்தியாவில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மோடியின் அரசு நாடு முழுவதையும் காவி மயமாக முற்படுவதாகவும் அதில் இந்த சீருடை நிறம் மாற்றமும் ஒன்றாகும் என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.    இந்த நிற மாற்றத்துக்கு சமாஜ் வாதி கட்சி உள்ளிட்ட வெறு சில கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.