ருகிற மே மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் கம்போ டியாவின் அங்கோர்வாட்டில் உலகத் தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடு நடைபெறவுள்ளதாக கம்போடியா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகை யாளர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் ஒரிசா பாலு, பன்னாட்டு தமிழர் சங்கத் தலைவர் திருதணிகாசலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய திருதணிகாசலம், இந்த மாநாட்டில் கம்போடியா பல்கலைக்கழகத்தில் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தோடு இணைந்து தமிழுக்குமான இருக்கை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. கம்போடியாவின் வணிக வரலாறும் தென்கிழக்காசியாவின் வணிக வரலாற்றையும் மீட்டெடுக்க இந்த மாநாடு உதவும்.

கடல்சார் தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு கூறிய தாவது தென்கிழக்காசிய நாடுகளாம மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருனே ஆகிய நாடுகளில் பின்னிப் பிணைந்து கிடக்கும் பண்டைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம் போன்ற தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் மாநாடாக இது அமையும். என்றும் அவர் தெரிவித்தார்.